Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் அட்டையில்…. பாலினத்தில் திருத்தம் செய்ய…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை கொடுக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையிலும் பலருக்கும் பெயர், பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.இதில் சிலவற்றை ஆன்லைனிலேயே அப்டட் செய்ய முடியும். சில விஷயங்களை ஆதார் மையத்திற்கு சென்று தான் மாற்ற முடியும். இவ்வாறு ஆதாரில் பாலினத்தை திருத்தம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முதலில் https://ssup.uidai.gov.in/ssup/ என்ற  அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று proceed to ஆதார் அப்டேட் கொடுக்க வேண்டும். பின் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணையும், கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட வேண்டும். இதையடுத்து send OTP கொடுத்தவுடன் உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த 6 இலக்க ஓடிபி எண்ணை பதிவிட்டு login செய்தவுடன் உள்ளே நுழைந்து பாலினத்தில் திருத்தம் செய்து Submit கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால் ஆதார் சேவை மையத்தில் சென்று செல்போன் எண் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

Categories

Tech |