உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற ஒரு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைல் எண் ஸ்டேட்டஸ் பற்றித் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.