உங்கள் ஆதார் அட்டை போலியானதா? இல்லையா? என்பதை எப்படி உங்கள் மொபைலில் சரிபார்ப்பது என்று பார்க்கலாம்.
ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம்.
ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா என்று செக் பண்ணுவதுகட்டாயமாகும். ஆதார் எண்ணைச் சரிபார்க்க உங்கள் செல்போனில் ஆன்லைன் மூலமாக மிக எளிதாக எப்படி செக் பண்ணலாம் என்று பார்க்கலாம்.
ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி.?
முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ முகவரியான https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பின்னர் My Aadhaar என்ற வசதியின் கீழ் Verify an Aadhaar Number என்பதை கிளிக் செய்யவும்.
அதில் உங்களின் ஆதார் எண்ணைப் பதிவிட்டு, அதன் கீழ் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டு ‘proceed to verify’என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்களது ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதாக இருந்தால் Aadhaar Verification completed!என்ற தகவல் வரும்.
புதியதாக open ஆகும் இந்தத் திரையில் உங்களது வயது, பாலினம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் தோன்றும்.
இதை mAadhaar மொபைல் ஆப் மூலமாகவும் சரிபார்க்கலாம். இச்செயலியில் “QR குறியீடு ஸ்கேனர்” என்பதை open செய்து , ஆதார் கார்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்க்கலாம்.