இந்திய குடிமகன்களாகிய அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. நமது முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் மாறி இருக்கிறது கல்வி சம்பந்தமான வேலைகள் தொடங்கி பணிபுரியும் இடங்கள் அரசின் சலுகைகள் பெறவும் ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த அடையாள அட்டையில் நமது கைரேகை, கருவிழி, முழுமையான விவரங்கள் என தனிநபரின் அனைத்து ரகசியங்களும் அடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும் வங்கி கணக்குடன் இணைக்கவும் பான் கார்டுடன் இணைக்கவும் என பல முக்கியமான ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பதை அவசியமாக்கி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கும் செயல்முறையும் அவசியமாகிவிட்டது. ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும் போது சிலர் வேறு மொபைல் எண்ணை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் ஆதார் அட்டை கிடைத்த பின் ஏதேனும் சில காரணங்களால் மொபைல் எண்ணை மாற்றியிருக்கலாம் அப்படி மொபைல் எண்ணை மாற்றுபவர்கள் அவர்களது பயன்பாட்டில் இருக்கும் மொபைல் எண்ணை ஆதாருடன் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் பயன்பாட்டில் இருக்கும் மொபைல் என்னுடன் மட்டும்தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
மேலும் ஒரு ஆதார் அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்களை இணைக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் ஏராளமான ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் சில மொபைல் எண்கள் பயன்பாட்டில் இல்லை என்றால் அதனை நீக்கிவிடலாம் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்ணை நீக்க விரும்புபவர்கள் முதலில் https://tafcop.detelecom.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இந்த பக்கத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களது மொபைல் எண்ணை பதிவிட வேண்டும் மொபைல் எண்ணை உள்ளிட்டதும் அந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படுகிறது. அதன்பின் அந்த ஓ டி பி யை உள்ளிட்டு பார்க்க இதுவரை ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைத்திருந்த மொபைல் எண்களின் மொத்த பட்டியலும் காட்டப்படும். அதில் எந்த எண் பயன்பாட்டில் இல்லையோ அந்த எண்ணை நீக்கிக் கொள்ளலாம்.