Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள் ஆர்டர் ரெடி விரைவில் டெலிவரி” நடிகர் தனுஷ் படத்தின் புதிய அப்டேட்…. குழப்பத்தில் ரசிகாஸ்…!!!!

நடிகர் தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் ஆர்டர் தயாராகிறது விரைவில் டெலிவரி செய்யப்படும் என இருக்கிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |