நமது வீடுகளில் அஷ்டலட்சுமிகள் குடியேறி செல்வம் பெருகவேண்டும் என்றால், நம் முன்னோர்கள் சிலவற்றைக் கடைபிடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள் இதனை தினமும் செய்வதன் மூலம் இல்லத்தில் குடிமகள் குடியேறி அனைத்து வளங்களும் பெருகி செழிப்புடன் வாழலாம் எனக் கூறியுள்ளனர்.
அவ்வாறு ஆன்மீகத்தில் செய்யவேண்டிய கடைமைகளாக கூறப்பட்டிருப்பவை:
1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.
2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல்.
3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல்.
4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல்.
5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.
6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.
7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.
8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.
9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.
இவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும். இவைகளை கடைபிடித்தால், அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை வழங்குவார்கள்.