தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞரான விவேக்கின் மறைவிற்கு மலையாள நடிகர் மம்முட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகர் விவேக் தன் வாழ்நாள் முழுவதும் நம்மை சிரிக்க வைத்த மனிதன். உங்கள் இறப்பு எங்கள் இதயத்தை நொறுக்குகிறது எனக்கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.