Categories
லைப் ஸ்டைல்

உங்கள் உடல் எடை 5 கிலோ வரை உயரும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அடுத்த 10 ஆண்டுகளில் உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மக்களின் உடல் எடை 5 கிலோ அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து, அதனை குறைப்பதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் மக்களின் உடல் எடை தற்போது உள்ளதைவிட ஐந்து கிலோ வரை அதிகரிக்கலாம் என்று தேசிய ஊட்டச்சத்து அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சராசரியாக 5 அடி 152 செ.மீ உயரம் இருக்கும் பெண்களின் உடல் எடை 5 கிலோவாகவும், 5.6 அடி 171 செ.மீ உயரம் உள்ள ஆண்களின் எடை 60 கிலோ வாகவும் இருப்பது ஆரோக்கியமானது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |