பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் காலைக்கடன் கழிக்கும்போது தங்கள் மலத்தை வீணாக்காமல் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் மனித மலத்தில் இருந்து போலியோ வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டு அது போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? மனித உடலில் பல வகை பிரிவுகள் இருக்கிறது. அவை எல்லாமே நோய் உண்டாக்குபவை அல்ல சொல்லப்போனால், உடலுக்கு நன்மை தரும் நோய்க்கிருமிகளும் நம் உடலில் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக இருக்கிறது. அதாவது 100,000 பிரான்ஸ் மாணவர்கள் இதே போல் தாங்கள் மலத்தை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். ஏனென்றால் மனிதனுடைய குடல் உள்ளிருக்கும் பாக்டீரியா மனித உடல் நலம் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தான் பிரான்ஸ் முழுவதையும் வாழ்பவர்களிலிருந்து 100,000 தன்னார்வலர்கள் தங்கள் மலத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Le french gut என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த ஆய்வு இந்த வருட இறுதிக்குள் 3000 தன்னார்வலர்களிடம் இருந்தும் 2027 ஆம் வருடம் ஆண்டு வாக்கில் 100,000 தன்னார்வலர்களிடமிருந்தும் மாத்திரைகளை சேகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் வயிற்றுக்குள் இருக்கும் பாக்டீரியாவிற்கும் புற்றுநோய் நீரழிவு உடல் பருமன் குடல் பிரச்சனைகள் ஆட்டிசம் பார்டிசன் மற்றும் ஆஸ்திமர் போன்ற பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து அந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சையை கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கமாகும்.