தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் வலிமை திரைப்படத்திற்கு பின் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “ஏ.கே. 61” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தீபாவளி பண்டிகையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் லண்டனுக்கு குடுபத்துடன் சுற்றுலா சென்று வந்த நடிகர் அஜித், பிறகு திருச்சியில் நடந்த மாநில அளவிலான 47வது துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்றார். இவற்றில் நடிகர் அஜித்தின் அணி பல பதக்கங்களை வென்றது.
அதனை தொடர்ந்து நடிகர் அஜித் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப் பிடிப்பில் பங்கேற்க சென்னை விமான நிலையத்தில் பேருந்தில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகியது. இந்த நிலையில் “உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளவும்” என நிபந்தனையற்ற அன்புடன் அஜித் என்ற பதிவை, அவரின் மேலாளர் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவ்வாறு என்ன காரணத்திற்காக அஜித் திடீரென்று அறிவுரை கூறியுள்ளார் என தெரியவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இப்பதிவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.