Categories
பல்சுவை

உங்கள் குடும்பத்திற்கு வருமானம், பாதுகாப்பு தரும் சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…!!!

எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் உமாங் காப்பீடு திட்ட பாலிசிதாரரின் குடும்பத்திற்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 26 வயதில் 4.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் தோறும் 1350 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலமாக வருடத்திற்கு 15 ஆயிரத்து 882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 வருடங்களாக இந்த தொகை செலுத்தப்படும் நிலையில் 4.76 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 30 வருடங்கள் பிரீமியம் செலுத்தி விட்டால் 31 ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசி நிறுவனமே வருடத்திற்கு 36,000 பணம் செலுத்தும்.

இதன் மூலமாக பாலிசிதாரர்களுக்கு 100 வயது ஆகும்போது 36 லட்சம் பணத்தை பெற முடியும். நூறு வயதுக்கு முன்புபாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரது நாமினிக்கு முதலீட்டு தொகை மொத்தமாகவும் அல்லது தவணை முறையில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் வரிவிலக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |