குழந்தைகளுக்கு ஏன் முடி கொட்டுகிறது, அதற்கான காரணங்களையும், தீர்வையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
சில விதமான குழந்தைகளுக்கு, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத் திட்டுக்கள் காணப்பட்டு, முடி உதிர்வுக்கு வழிவகிக்கிறது. அவ்வாறு முடி உதிர்ந்த இடத்தில், கறுப்பு நிறத்துடைய சிறிய புள்ளிகள் காணப்படும். இத்தகைய பாதிப்புடைய குழந்தைகளுக்கு நீணநீர் செல்லக்கூடிய பாதையில் வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள் மூலம் இந்த மாதிரியான பிரச்சினை காணப்படும். குழந்தைகளுக்கு, மற்றவர்கள் பயன்படுத்தின சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருவரின் பிரச்சனை மற்றவர்களுக்கு பரவும். எனவே ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக உருவெடுத்து, பின் முடி உதிர்ந்து, விளைவு வழுக்கையாக மாறும்.
சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழக்கும் பழக்கம் உண்டு. அவர்கள் ஒவ்வொரு முடியாக இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு, கவலை அல்லது மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது. ஆனால்இதனை ஒருவகை மனநல கோளாறாக கருதுகிறார்கள். Behavioural therapy ( ‘பிகேவியோரல் தெரபி’) எனப்படும் நடத்தை மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலமாக அவர்களை இயல்பு நிலைக்கு மீட்டு விடலாம்.
உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களில் தொற்று ஏற்படுவதை ‘டெலோஜென் எப்ளூவியம்’ என்பர்கள். இதன் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும். கொலோஜென், முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனுடைய செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில், அதிக அளவில் முடி உதிர்தல் ஏற்படும். மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டி விடுகிறது. ஆதலால் குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுப்பதை பெற்றோர்கள் உறுதி படுத்த வேண்டும்.