Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டம்….!!!!!

பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர் கால நிதி குறித்த கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல செலவினங்கள் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். இது போன்ற எதிர் கால நிதித் தேவைகளை சமாளிக்கதான் பல முதலீட்டு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் நல்லவருமானம் ஈட்டுவதாக பிபிஎப் இருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவருங்கால வைப்புநிதி கணக்கை துவங்கி மாதந்தோறும் டெபாசிட் செய்வதன் வாயிலாக அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியை உங்களால் பெற முடியும். பிபிஎப் கணக்கினை திறப்பதற்கு அதிகபட்சம் வயதுவரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எந்த வயதிலும் இக்கணக்கை திறக்கலாம் மற்றும் முதலீடு செய்யலாம். பிபிஎப் கணக்கை திறப்பதற்கு தாங்கள் வங்கிக்கு சென்று படிவம்-1ஐ நிரப்பி பிறகு முகவரி சான்றுக்காக பாஸ்போர்ட், நிரந்தர ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன்கார்டு ஆகியவற்றை கொடுக்கலாம். அடையாளச் சான்றுக்கு பான்கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கொடுக்கலாம். அதன்பின் குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும் கொடுக்கவும்.

மேற்கண்ட ஆவணங்களை கொடுத்த பிறகு கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய்.500 (அல்லது) அதற்கு மேற்பட்ட செக்கை கொடுக்கவும். கணக்கிற்கான செயல்முறை முடிந்ததும் குழந்தையின் பெயரில் பாஸ்புக் கொடுக்கப்படும். தற்போது குழந்தை 3 வயதாக இருக்கும்போதே பிபிஎப் கணக்கை துவங்கி டெபாசிட் செய்ய தொடங்கிவிட்டீர்கள் எனில் அக்குழந்தை 18 வயதை அடையும்போது பிபிஎப் கணக்கு முதிர்ச்சியடையும். மாதந்தோறும் தவறாமல் நீங்கள் குழந்தையின் பிபிஎப் கணக்கில் ரூபாய்.10,000 என 15 வருடங்களுக்கு டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு 7.10 சதவீத வட்டியுடன் சேர்த்து பிபிஎப் கணக்கின் முடிவில் ரூபாய்.32,16,241 கிடைக்கும். இத்தொகையானது குழந்தைக்கு 18 வயதில் கிடைக்கப் பெறும்.

Categories

Tech |