Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும்

ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த பின் தண்ணீரில் கழுவவேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும். முகம் பிரகாசமாக இருக்கும். வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸ் மெல்ல மெல்ல குறைந்துவிடும். பப்பாளி பழத்துடன் சிறிது அளவு தேன் கலந்து முகத்தில் பூசி பின் 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் உடனடியாக பலபலப்பாக மாறிவிடும்.

Categories

Tech |