தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள நீர்வளத் துறை சார்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உபகோட்டம் மற்றும் கோட்டங்கள் வாரியாக உதவி பொறியாளர்கள் நியமனம் செய்ய நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்கள் இன் கைபேசி குறித்த விவரத்தை தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.