போலி பான் அட்டையை கண்டறியும் புதிய செயலியை இந்திய வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, என்ஹேன்ஸ்டு பேன் கியூ ஆர் கோட் ரீடர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இணைய தகவல் திருட்டு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற காரியங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. போலிகளை கண்டறிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் போலி பான் அட்டையை கண்டறியும் புதிய செயலியை இந்திய வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து கொடுக்கப்படும் அனைத்து பான் வார்த்தைகளுக்கும் ஒரு தனித்துவமான கியூ ஆர் குறியீடு கட்டாயம் இருக்கும். இதனை வைத்து போலிகளை கண்டறியும் செயலியை இந்த துறை உருவாக்கியுள்ளது. இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Enhanced PAN QR Code Reader என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கான ஆதரவு களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பிறகு ஸ்மார்ட் போனின் பின்பக்க கேமரா உதவியுடன் பான் அட்டையில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பான் அட்டை போலியாக இருந்தால் செயலியானது எந்த தகவலையும் வெளிப்படுத்தாது.