இ பி எஃப் ஓ சந்தாதாரர்கள் பலரின் கணக்குகளில் பிஎஃப் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் சிலரது கணக்குகளில் இந்த தொகை வந்து கணக்கில் காணப்படவில்லை. உங்கள் கணக்கிலும் இன்னும் வட்டி தொகை வந்ததற்கான குறிப்புகளை காண முடியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சிலரது கணக்கில் ஏன் இந்த தொகையின் இருப்பு தெரியவில்லை என்பது பற்றி பணியாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தற்போது நிதி அமைச்சகம் இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது.
அதாவது நிதி அமைச்சகம் இபிஎப்ஓ பற்றி ஒரு ட்வீட் செய்து சில தொழில்நுட்ப புதுப்பித்தல் தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. இது பற்றி தகவல் அளித்துள்ள அமைச்சகம் பி எப் சேமிப்பு மீதான வரி விதிப்பு சட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக சாப்ட்வேர் மேம்படுத்தல் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் epfoவில் வட்டி கிடைக்காத கிரெடிட்டில் கணக்கில் பார்க்க முடியவில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் அமைச்சகம் ட்வீட் செய்து வட்டி தொகையை பொறுத்த வரை எந்த வாடிக்கையாளர்களுக்கும் எந்தவிதமான வட்டியில் இருக்கும் ஏற்படவில்லை அனைத்து ஈபிஎப் சந்தாதாரர்களின் கணக்குகளிலும் வட்டி வரவு வைக்கப்படுகின்றது.
இருப்பினும் இபிஎப் செயல்படுத்தப்படும் மென்பொருள் மேம்படுதலின் காரணமாக இது தெரியவில்லை என தெரிவித்துள்ளது. இன்போசிஸ் டெக்னாலஜிஸ் இன் முன்னாள் இயக்குனர் மோகன் தாஸ் பாயின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறது அமைச்சகம் செட்டில்மெண்ட் மற்றும் தொகையை திரும்ப பெற விரும்பும் அனைத்து வெளிச்செல்லும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கும் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
முன்னதாக மோகன்தாஸ் பாய் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் மோடியே டேக்ஸ் செய்து அன்புள்ள இபிஎப்ஓ எனது வட்டி எங்கே என ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் அரசாங்கம் வழங்கிய தகவலின்படி இபிஎப் சந்தாதாரர்கள் 2021 – 22 ஆம் வருடத்திற்கான அவர்களின் ஓய்வூதிய சேமிப்பு கணக்குகளில் 8.1 சதவீத வட்டி விகிதத்தை பெறுவார்கள் என்பது தெரிந்ததாகும். அதே சமயம் இந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 8.5 சதவீதிலிருந்து 2021 – 2022 வருடத்திற்கு எட்டு புள்ளி ஒரு சதவீதமாக குறைக்க முடிவு செய்திருக்கிறது.