கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த அவர், குருநாத் சிகிச்சை முடிந்து கடந்த ஐந்தாம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்,ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவடைந்து விட்டதாகவும் பத்தாம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகள் அனைத்தையும் மீண்டும் தொடங்குவார் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் கூறியிருந்தார். இதனிடையே கருணா சிகிச்சைக்கு பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் பால்கனியில் இருந்து கொண்டே தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அவர், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றி, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் விருப்பம் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.