உங்கள் பெயரின் முதல் எழுத்து A ல் தொடங்கினால், உங்களுடைய குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
எண்களின் முக்கியத்துவத்தையும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றிய ஆய்வுதான் நியூமராலஜி அறிவியல். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள், உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும்.
இவர்கள் நேர்மையானவர்களாக, வாழ்வில் ஏதேனும் ஒரு லட்சியம் கொண்டவர்களாக, எங்கும் எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள முயல்பவராக, தங்கள் குறிக்கோளில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.
இந்த நபர்கள், அவர்களின் இலக்கை நோக்கி இயக்கப்படுவதோடு, அவர்களின் இலக்குகளை அடைய எது வேனாலும் செய்ய தயங்க மாட்டார்கள்.
இவர்கள், ஒரு குழுவுடன் இருக்கும் நிலையில், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவராக இருப்பார்கள். அதன் காரணமாக, இவர்கள் இயற்கையிலேயே தலைவராக பொறுப்பேற்கும் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆதலால், பலர் இவர்களை பின் தொடர விரும்புவார்கள்.
பல திறமைகள் இவர்களிடம் நிச்சயம் ஒளிந்து கொண்டிருக்கும். சமூக ஆர்வளராகவும், கல்வியில் தலை சிறந்தவராகவும் இருப்பதோடு, மக்களிடம் ஏதேனும் ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கையில் ஒரே நோக்கத்தோடு இருக்கின்ற, இவர்கள் நடைமுறைக்கு தகுந்தார்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். தப்பிதவறி கூட இவர்கள் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். இவர்களது வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களிடம் தங்கள் வார்த்தைகளின் உணர்ச்சி பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இந்த எழுத்தில் தொடங்கும் பெயரில் உள்ளவர்கள், ரொமான்ஸில் பின்தங்கியவர்களாக இருப்பார்கள். அதிக அளவில் ஊர் சுற்றுவார்கள். இவர்கள் இயற்கை மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அருவருக்கத்தக்க செய்கைகள் மூலமாக கூடிய விரைவில் எரிச்சல் அடைவார்கள்.
இந்த நபர்கள், அதிக புத்திசாலித்தனம் உடையவர்களிடம் கூடிய விரைவில் ஈர்க்கப்படுவார்கள். இப்படி பட்டவர்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்கவே மாட்டார்கள். குறிப்பாக, அவர்களது சொந்தக் காலில் நிற்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள்.