Categories
பல்சுவை

உங்கள் முகம் ஜொலிஜொலிக்க….. மேக்கப் தேவையில்லை….. இந்த சமையலறை பொருட்களே போதும்…..!!!

நாம் அனைவருமே முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவோம். அழகு என்பது தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியது இல்லை. இயற்கையாக உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஈஸியாக பராமரித்துக் கொள்ளலாம். வறண்ட சருமத்திற்கு நீங்கள் மாய்ஸ்சுரைசிங் பேக் உருவாக்க அவகேடோ பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த பழத்தில் உள்ள நன்மைகள் நமது முகத்தை மிகவும் பளபளக்க வைக்கின்றது. அவகேடோ பழத்தை மசித்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு கடையில் வாங்கும் விலை உயர்ந்த ஸ்க்ரப் தேவையில்லை. உங்கள் கிச்சனில் இருக்கும் சர்க்கரை மற்றும் சமைக்கப்படாத அரிசி போன்ற பொருட்களை வைத்து அகற்ற முடியும். 2 டீஸ்பூன் ஆர்கானிக் கிரானுலேட்டட் உடன் சர்க்கரையை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் உங்களது முகம் பளபளப்பாக இருக்கும்.

தற்போது பலரும் மடிக்கணினியில் பல மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர். அப்படி நீங்கள் வேலை பார்க்கும் போது உங்களது கண்கள் வீங்கிய நிலையில் இருக்கும். வீங்கிய கண்களை தணிக்க உங்க சமையலறை அலமாரியில் உள்ள தேநீர் பைகளை பயன்படுத்தலாம். காலையில் உங்கள் டீ கப்பை நிரப்புவதற்கு மட்டுமல்லாமல் வீங்கிய கண்களை போக்கவும் இது உதவுகிறது. இரண்டு டீ பேக்குகளை வெந்நீரில் 3 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து பிறகு குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்கவும். அதை எடுத்து ஒவ்வொரு கண்ணிலும் ஒரு தேநீர் பைகளை வைத்து பத்து நிமிடம் அப்படியே வையுங்கள். உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறும். வீக்கமும் குறையும்.

Categories

Tech |