தற்போதைய உலகத்தில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பயன்பாட்டிற்கேற்ப அதில் அப்டேட்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இன்று பலரும் மொபைல் போன் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். நீங்களே சில வழிகளை கையாளுவதன் மூலமாக மீண்டும் அதை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் யாருடைய உதவியும் தேவை இல்லை. ஆண்ட்ராய்டு சாதனங்களின் கூகுள் அக்கவுண்ட் மூலமாக சரி செய்யலாம். அதாவது உங்கள் மொபைல் போனில் கூகுள் அக்கவுண்ட்டை லாகின் செய்திருந்தால் எளிதாக திறக்கலாம். உங்கள் மொபைல் போனில் தவறான கடவுச்சொல் என்று பலமுறை காட்டிய பிறகு சிறிது நேரம் கழித்து, அந்த அடுத்த முயற்சியாக forget the password or pattern என்று திரையில் தோன்றும். அதை கிளிக் செய்த பிறகு அந்த போனில் பதிவு செய்யப்பட்ட கூகுள் மெயில் ஐடி கேட்கும். அதை உள்ளிட்ட பிறகு போன் அன்லாக் ஆகிவிடும்.
இப்போது புதிய பாஸ்வேர்டை நீங்கள் செட் செய்யலாம். இவ்வாறு செய்வதற்கு இணைய வசதி தேவை. wifi கனெக்ட் செய்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு சாதனங்களின் முந்தைய வழிமுறையில் போன் அன்லாக் ஆகவில்லை என்றால் கீழ் வரும் முறையை பின்பற்றவும். முதலில் போனை சுவிட்ச் ஆப் செய்யவும். பிறகு ஒரே நேரத்தில் பவர் பட்டனை சேர்த்து சிறிது நேரம் அழுத்தவும். இப்போது recovery ஆப்சன் தோன்றும். அதில் ‘reset’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் ‘clean/Erase Data’ and ‘wipe cache’ என்ற ஆப்ஷன்கள் தோன்றும். இப்போது போன் ரீ-செட் ஆகிவிடும். மீண்டும் ஃபோனை ஆன் செய்தால் பாஸ்வேர்டு இன்றி திறக்கும். ஆனால் இதில் போனில் உள்ள தரவுகள் அனைத்தும் அழிந்து விடும். இதனையடுத்து ஐபோனில் பாஸ்வேர்டு மறந்து விட்டால் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள். Recovey முறைக்கு செல்ல உங்கள் போனை Macbook அல்லது pc யுடன் இணைந்த பிறகு பவர் பட்டனை சிறிது நேரம் அழுத்தவும். பின்னர் திரையில் recovery ஆப்ஷன் தோன்றும். அதில் ரீ-செட் செய்து கொள்ளலாம். இதற்காக Macbook அல்லது pc ல் iTune இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். iTune restor ஆப்சனை கிளிக் செய்தால் பாஸ்வேர்ட் நீக்கப்பட்டு மற்ற தரவுகள் எல்லாம் சேமிக்கப்பட்டு விடும். இப்போது புதிய பாஸ்வேர்டை செட் செய்து கொள்ளலாம். ஐபோன் 7 சீரிஸ் பைனர்கள் கீழ் வால்யூம் பட்டனையும் பழைய ஃபோன்களில் ஹோம் பட்டனை கிளிக் செய்யவும்.