Categories
பல்சுவை

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா… எப்படி கண்டுபிடிப்பது… வாங்க பார்க்கலாம்…!!!

இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இதனால் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரட்டுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

அது எப்படி என்றால், நீங்கள் பயன்படுத்தாத போது செல்போன் அதிக சூடாகிறது என்றால் உங்களது செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நீங்கள் மேற்கொள்ளாத அழைப்பு, அனுப்பாத மெசேஜ்கள் ஆகியவை உங்கள் செல்போனில் காணப்படும், அவையும் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியே. நீங்கள் எடுக்காத புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் செல்போன் கேலரியில் இருக்கும். அப்போது உங்கள் செல்போன் கேமரா வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம். எனவே இதை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Categories

Tech |