ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். இப்போது ரேஷன் கார்டு முகவரி மாற்றம் குறித்து பார்க்கலாம்.
முதலில் www.pdsporta.lnic.in என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகார பூர்வ pds portal உள்ளே நுழைய வேண்டும்.
இதன் முகப்பு திரையில் state goverment portals என்ற வசதியை க்ளிக் செய்யவும்.
பின்னர் அதில் உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்து அதில் ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் உங்கள் userid மற்றும் password பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.
இந்த விண்ணப்ப படிவத்தினை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.