Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள்…. பொருள் கொடுக்காமல் ஏமாற்றினால்…. எப்படி புகார் கொடுப்பது…??

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது ரேஷன் கடை ஊழியர்கள் பொருள் வைத்துக்கொண்டு இல்லை என்று கூறினாலோ? அல்லது விலை அதிகமா வைத்து விற்றாலோ, வாங்கிய பொருளுக்கு வாங்கியதாக மெசேஜ் வந்தாலோ, ரேஷன் கடை ஊழியர்கள் தரைகுறைவாக பேசினாலோ எப்படி புகார் அளிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரேஷன்கடையில் ஏமாற்றப்பட்டாலோ அல்லது ரேஷன் கடை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் 1967 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களின் புகாரை தெரிவிக்கலாம். இரண்டாவதாக tnpds.gov.in என்ற இணையதளத்தில் உஙக்ளுடைய புகாரை பதிவு செய்து கொள்ளலாம். அதில் உங்களின் பெயர், போன் நம்பர், மெயில் ஐடி அனைத்தும் கொடு என்னக்க வேண்டும். பின்னர் மொழியை தேர்வு செய்து அதில் “நியாயவிலைக்கடை கடைக்காரர்” என்பதை தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய பிரச்சினையை குறிப்பிட வேண்டும்.

இரண்டாவதாக TNEPDS என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து ரேஷன் கார்டுக்கு கொடுத்து நம்பரை பதிவு செய்து உள்ளே சென்றால் முன்னதாக கூறியது போல உங்களுடைய புகாரை தெரிவித்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யமுடியாதவர்கள் தாலுகா ஆபீஸ்க்கு   சென்று TSO (வட்ட வளங்கல் அதிகாரி) அவரிடம் சென்று புகாரினை கொடுத்துவிடலாம். இப்படி நீங்கள் கொடுக்கும் புகார் நியாயமானதாக இருந்தால் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுடைய புகார் சரி செய்யப்படும்.

Categories

Tech |