Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை” மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியின் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி தான் சேமித்து வைத்திருந்த 76 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு விஜயலட்சுமி வங்கிக் கணக்கு புத்தகத்தில் பண வரவு-செலவு விவரத்தை பதிவு செய்துள்ளார்.

அப்போது மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 3 முறை வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டு இருப்பதை அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான தகவல் கிடைக்கவில்லை. இதனால் மூதாட்டி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |