உங்கள் வரி திட்டமிடலை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் சிறந்தது. முறையான முதலீட்டு திட்டம் அல்லது சிப் ஃபண்ட் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிகளை சேமிக்க முடியும். அதாவது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்த நிலை மியூச்சுவல் ஃபண்ட்.
டேக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் IT சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வருமான வரியைச் சேமிக்க உதவும். இதில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம் மற்றும் ஒவ்வொரு வருடமும் உங்கள் முதலீடுகளுக்கு வரி விலக்குகளைப் பெற முடியும்.
அதாவது க்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்தநிலை மியூச்சுவல் ஃபண்ட். இது முதன்மையாக ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்யப்படுகின்றது. அதனால் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்காக இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
2022 இல் முதலீடு செய்ய சிறந்த வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள்:
1. ஆக்சிஸ் லாங்ட்ரெம் ஈக்விட்டி ஃபண்ட் (Axis Long Term Equity Fund)
2. கனரா ரொபெகோ டேக்ஸ் சேவர் ஃபண்ட் (Canara Robeco Equity Tax Saver Fund)
3. மிரே அசெட் டேக்ஸ் சேவர் ஃபண்ட் (Mirae Asset Tax Saver Fund)
4. இன்வெஸ்கோ இந்தியா டேக்ஸ் சேவர் ஃபண்ட் (Invesco India Tax Plan Fund)
5. டிஎஸ்பி டேக்ஸ் சேவர் ஃபண்ட் (DSP Tax Saver Fund)