வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேர்மைக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை என்று விதவிதமான வாசகங்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஓட்டு கேட்டு வருகிறார்கள். அதேபோல் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சாரம் மூலம் எதிர் கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் காரசார விவாதங்களும் சமூக வலைதளங்களில் அரங்கேறி வருகிறது. இதனால் தற்போது சமூக வலைதளங்களில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.