இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தனிநபர்களின் சுய விவரங்கள் பல முறைகளில் திருடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி 487 மில்லியன் whatsapp பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பேட்டா நிறுவனம் இதை முற்றிலும் மறுத்த நிலையில் உங்கள் whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று +91 என்று அச்சிட்டு உங்கள் கைபேசி எண்ணை டைப் செய்ய வேண்டும். அல்லது உங்கள் இமெயில் ஐடியையும் கொடுக்கலாம். அதன் பிறகு check now என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.