பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.
பிரிஞ்சி இலைகளை எரித்து அதன் புகையை வீட்டில் பரப்பினால் பல்லிகள் வராது.
வெங்காயத்தை வெட்டி வீட்டின் மூலையில் வைக்கவும். அல்லது அதை அரைத்து அதன் சாற்றை சுவரில் தெளிக்கவும்.
மிளகை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வடிகட்டி நீரை சுவரில் தெளிக்கவும்.
பூண்டை அரைத்து தெளிக்கலாம் அல்லது பூண்டை உரித்து மூலைகளில் வைத்தாலும் ஒழித்து விடலாம்.