கொரோனா வைரஸ் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக மற்றும் திமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வைரஸ் தொற்று இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. ஆகவே அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இது நான் தமிழக முதல்வராக சொல்லவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக சொல்கிறேன் என்று கூறினார்.
ஆத்தூர் பகுதியில் பெரியசாமியும் பழனி தொகுதியில் அவரது மகன் செந்தில்குமார் போட்டியிடுகின்றனர். ஆனால் அதிமுக கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. சாதாரண தொண்டன் கூட முதல்வராக வர முடியும். நானும் கிளை செயலாளர்இ ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்து தான் முதல்வராக வந்துள்ளேன். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும்பொழுது மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அவர் தமிழக முதல்வரையும் தமிழக அரசை மட்டுமே குறை கூறி வருகிறார்.
பொதுமக்களை சிந்திக்கும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் மற்றும் தினமும் துணி துவைக்க கஷ்டப்படும் பெண்களுக்காக வாஷிங் மெஷின் என மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதேபோல் விவசாயிகளுக்கு தற்போது விவசாய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி சுய உதவி பெண்களுக்கு கடன் தள்ளுபடி 6 பவுன் நகை தள்ளுபடி என அனைத்து அம்சங்களும் செய்யக்கூடிய ஒரே அரசு அதிமுக அரசு ஆகவே அதிமுகவுக்கு ஆதரிக்க வேண்டும் என கூறினார்.