நாடு முழுவதும் வரும் மாதங்களில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா- ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றை பார்க்கவும் அணுகவும் முடியும்.ப் பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5 ஜி வசதி கொண்ட ஃபோன்களை வழங்க தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து நோக்கியா, ஒப்போ, சியோமி, சாம்சங் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் சந்தையில் 5ஜி-ரெடி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. தற்போது, இந்தியாவில் சாம்சங் கேலக்சி Z ஃபோல்ட் Fold 4 5ஜி, சாம்சங் கேலக்சி எஸ்22, எஸ்22+ மற்றும் எஸ்22 அல்ட்ரா, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற இன்னும் பல 5ஜி ஃபோன்கள் கிடைக்கின்றன.
இவற்றில் உங்கள் தேவக்கேற்ற போனை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் மொபைல் உங்களுக்கு விருப்பமாக இருந்து, அதை மாற்றும் விருப்பம் இல்லாமல் இருந்து, அதே நேரத்தில் 5ஜி சேவையில் தவறவிட விருப்பம் இல்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான். உங்கள் போன் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா என சரிபார்க்கவும். சரி பார்க்க உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த எளிய முறைகளை பின்பற்றவும்.
- முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்க் ஆப்புக்கு செல்லவும்.
- அங்கு, ‘Wi-Fi & Networks’ ஆப்ஷனுக்குச் செல்லவும். சில ஃபோன்களில் அது ‘நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்’ அல்லது ‘நெட்வொர்க்’ என இருக்கலாம்.
- அடுத்து, ‘சிம்’ அல்லது ‘சிம் & நெட்வொர்க்’ ஆப்ஷனை டேப் செய்யவும்.
- பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பின்னர் ‘விருப்பமான நெட்வொர்க் வகை’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஸ்மார்ட்போன் 5G நெட்வொர்க்கை ஆதரித்தால், 4G மற்றும் 3G உடன் 5G விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இருப்பினும், ஃபோன் 5G-ஐ ஆதரிக்கவில்லை என்றால், அதில் 5G ஆப்ஷன் இருக்காது. அதாவது உங்கள் தொலைபேசி 5G உடன் வேலை செய்யாது. உங்கள் போன் 5G-ஐ ஆதரிக்கவில்லை என்றால், 5G-இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.