Categories
பல்சுவை

உங்கள் ஸ்மார்ட் போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா?…. இதோ இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க…..!!!

தற்போது ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற நிலை தான் நாம் உள்ளோம். புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம். அதில் ஒன்று பேட்டரி உள்ளது. அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் எத்தனை நேரம் நீடிக்கும் என்று அம்சத்தின் மீது நிச்சியம் கவனம் செலுத்துவோம். ஸ்மார்ட்போன் வாங்கி 6,7 மாதங்கள் பேட்டரியின் செயல் திறன் சிறப்பாக இருக்கும். ஆனால் படிப்படியாக குறைந்து நம்மை ஏமாற்றம் அடைய செய்கிறது. இந்த சிறந்த பேட்டரி ஆப்ஷனனுடன் கூடிய போனை வாங்கி கூட அந்த பேட்டரி மிக வேகமாக தீர்ந்து நம்மை நெருக்கடியில் தள்ளும். இந்த பிரச்சினையை பலரும் எதிர்கொள்கின்றனர். பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவது மிகவும் பயன் தரும்.

  •  நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தில் சர்ஃபிங் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தொலைபேசியில் செயலி முழு வேகத்தில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் உள்ள பேட்டரி ஆப்ஷனுக்கு சென்று Enhanced Processing ஆப்ஷனை ஆப் செய்யவும்.
  • உங்கள் ஸ்மார்ட் போனில் facebook, youtube மற்றும் இது போன்ற பிற செயளிக்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷன் அதிக பேட்டரி சாப்பிட்டுவிடும் செட்டிங்ஸ் சென்று நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயல்களில் புஷ் நோட்டிபிகேஷன் ஆப் செய்து பேட்டரியை சேமிக்கவும்.
  • அதனைதொடர்ந்து wifi பயன்படுத்துவது உங்கள் மொபைல் போன் டேட்டாவை சேமிக்கிறது. Wifi ஆனில் வைத்திருந்தால் பேட்டரி விரைவாக ட்ரெயின் ஆகும். எனவே தேவைப்படும் போது ஆன் செய்யவும் மீதமுள்ள நேரத்தில் அதை ஆஃப் செய்யவும்.
  • அதுமட்டுமில்லாமல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உபயோகித்த பிறகு ஷர்ட் டவுன் செய்வது போல உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களை பயன்படுத்திய பிறகு முழுமையாக மூடிவிடவும். செயலிகள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டே இருப்பதால் போனில் பேட்டரியை சீக்கிரம் தீர்ந்து போக வாய்ப்புள்ளது. அதனால் தேவையான பயன்படுத்தக்கூடிய செயலிகளை மட்டுமே வைத்துக் கொள்வது நல்லது. சாப்பிடுகின்றனர்.
  •  உங்கள் செல்போனில் உள்ள தேவையற்ற செயலிகளை டெலிட் செய்வது சிறந்தது. இதனையடுத்து ஸ்மார்ட் ஃபோனில் பேட்டரி வேகமாக ட்ரெயின் ஆகிய நிலையில் பேட்டரி சேமிக்க விரும்பினால், ஸ்மார்ட் போனில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சேவிங் மோடை பயன்படுத்தவும். இது தொலைபேசியின் பேட்டரியை சேமிக்கும்.

Categories

Tech |