ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்தால் உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்பதைதான் இங்கு பார்க்கபோகிறோம். உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை. அதற்கு உங்கள் மொபைலில் மத்திய அரசின் UMANG App மட்டும் டவுன்லோட் செய்யவேண்டும். UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும். அதில் ‘Employee Centric’ ஆப்ஷனை கிளிக் செய்து, ‘Raise Claim’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து ‘Submit’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இதையடுத்து உங்களுக்கு ‘Claim reference number’ அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார், பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.