இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் சென்று பணம் எடுப்பதை தவிர்த்து மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையை அதிகமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் UPI முறையில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் போது சில சமயம் தோல்வி அடைந்து விடுகின்றன.
இவ்வாறு தோல்வியடைந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் இருந்து பணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் தினமும் வங்கியில் இருந்து ரூபாய் 100 இழப்பீடு தர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட சேவை வழங்குநரிடம் raise dispute என்று புகார் செய்ய வேண்டும்.