Categories
அரசியல்

“உங்க அரசியல் இங்கே செல்லாது…!!” பாஜக அண்ணாமலை குறித்து கே.எஸ் அழகிரி பேச்சு…!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் தமிழக பாஜகவோ இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே நாங்கள் போராட்டம் நடத்த போகிறோம் என கூறிக்கொண்டு அலைகிறார்கள். பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கிற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கருத்து கூறியதாக செய்தி வெளி வந்தது.

அதனை முதலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உற்றுநோக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு இங்கு துரிதமாக நடைபெற்று வரும் வழக்கில் மூக்கை நுழைத்து மக்களை திசை திருப்பும் செயல் ஈடுபட தேவையில்லை. இதுபோன்று ஒரு பெண்ணின் பாலியல் பலாத்காரத்தை கூட பயன்படுத்தி அரசியல் செய்யும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் எவ்விதத்திலும் தமிழகத்தில் எடுபடாது.” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |