அதிமுக சட்ட ஆலோசகர் குழு உறுப்பினர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தனர். அப்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த மனுவை ஆளுநரிடம் வழங்கினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
மேலும் திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய்வழக்குகள் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தமிழகத்தில் குட்கா விற்பனை பிரபலப்படுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறும் ஈ.பி.எஸ். பொள்ளாச்சி விவகாரத்தில் எடுத்த நடவடிக்கையை கூற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஈ.பி.எஸ்.க்கு பதிலடி கொடுத்துள்ளார்.