Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாரில் ஏதாவது அப்டேட் செய்ய…. வெறும் 5 நிமிடம் போதும்…. இதோ எளிய வழி….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்று. அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தனி நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். இதில் ஏதாவது நீங்கள் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அதை நீங்கள் வீட்டிலிருந்தவாறே செய்யலாம். மொபைல் நம்பர் உள்ளிட்ட ஒரு சில அப்டேட் களுக்கு மட்டுமே ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். மற்றபடி அடிப்படை அப்டேட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக நீங்களே திருத்தம் செய்யலாம்.அதற்கு Aadhaar Self-service Update Portal என்ற வசதி உள்ளது. அதற்கு https://ssup.uidai.gov.in/ssup/ என்ற வெப்சைட்டில் சென்றாலே நீங்கள் சுயமாக அப்டேட் செய்ய முடியும்.

மேலும் நீங்கள் எந்த தகவலை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் அதற்குரிய ஆவணங்களை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும். இதனை செய்வதற்கு உங்களின் மொபைல் நம்பர் மிக முக்கியம். உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி மூலமாக அப்டேட் செய்ய முடியும். அதனால் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் கட்டாயம். பயோமெட்ரிக் தொடர்பான அப்டேட்களுக்கு ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் அதற்கு தகுந்த கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.

Categories

Tech |