இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆதார் கார்டில் ஏதாவது விவரங்களை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு மொபைல் எண் கட்டாயம். ஆனால் சிலர் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றன. ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பர் எது என்று தெரிந்து கொள்வதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளது.
அதற்கு முதலில் மொபைலில் ப்ளே ஸ்டோரில் இருந்து MyAadhaar என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் I Corcern என்ற ஆப்ஷனை தேர்வு செய்து Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைல் எண் கேட்கப்படும். அதில் நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொடுத்து விடலாம். அந்த எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவிட்டு சப்மிட் கொடுத்தவுடன் verify Aadhaar என்பதை தேர்வு செய்ததும் உங்கள் ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். தற்போது தோன்றும் திரையில் உங்களின் பெயர் மற்றும் வயது போன்ற அனைத்து விவரங்களுடன் நீங்கள் ஆதாரில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணின் கடைசி மூன்று இலக்க எண்கள் காண்பிக்கப்படும்.
இணையதளம் முறையில் மொபைல் நம்பரை சரிபார்க்க, ஆதாரில் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை தெரிந்து கொள்வதற்கு AADHAAR AYUSHMAN என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் என்ற ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு SCHEME என்பதில் PMJAY என்பதையும், உங்களின் மாநிலத்தையும் ஆதார் எண்ணையும் உள்ளிட்டு GENERATE OTPஎன்பதை தேர்வு செய்ததும் உங்கள் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்கள் திரையில் தோன்றும்.