நாடு முழுவதும் தனிநபருக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் ஆதார் அட்டை திடீரென தொலைந்துவிட்டால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆதார் அட்டையை மிக எளிதாக மீட்டெடுக்க முடியும். அதையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் ஆதார் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://UIDAI.gov.in என்ற பக்கத்தில் செல்லவும்.
உள்ளே நுழைந்த பிறகு, home page பக்கத்தில் my Aadhaar விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.
அதன்பிறகு list வடிவமைப்பில் பல விருப்பங்கள் தோன்றும்.
அதில் ஆதார் சேவை நெடுவரிசை க்கு சென்று Retrieve lost or forgotten EID/UID கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு கீழே 2 விருப்பங்கள் இருக்கும்.
அதில் நீங்கள் விரும்பும் எந்த எண்ணையும் தேர்ந்தெடுக்கவும்.
இதற்குப் பிறகு உங்கள் முழுப்பெயர், மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.
அதன் பிறகு திரையில் தோன்றும் captcha என்பதை டைப் செய்யவும்.
அதன்பிறகு send OTP விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் ஓடிபி கிடைக்கும்.
அதன் பிறகு otp சமர்ப்பித்த பின்னர் உங்கள் EID அல்லது UID எண் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும்.
இவ்வாறு உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் மீட்டெடுத்துக் கொள்ள முடியும்.