Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் இன்றி அமையாத ஒரு ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். ஆதார் கார்டை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபரின் இன்றியமையாத ஒரு ஆவணமாக விளங்கும் கூடிய இந்த ஆதார் கார்டில் ஏதாவது பிரச்சனை அல்லது புகார் இருந்தால் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உடனே இந்த மொபைல் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். ஆதார் சேவை எண்: 1947

இந்த அறிவிப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை இந்த எண்ணுக்கு அழைத்து கூறலாம். Bஉங்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இது டோல் ஃப்ரீ நம்பர் தான். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் இந்த நம்பருக்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நம்பருக்கு அழைத்து வாடிக்கையாளர்கள் தீர்வு காண முடியும். மேலும் ஆதார் கார்டு பதிவு ஸ்டேட்டஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் இந்த நம்பர் மூலமாக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |