Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் அதனை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அப்படி ஆதார் கார்டு புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.ஆனால் நேரடியாக நீங்கள் ஆன்லைனில் அதனை மாற்ற முடியாது.

மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைன் மூலமாக போட்டோ மற்றும் வசதி தற்போது கொண்டுவரப்படவில்லை.எனவே உங்களின் ஆதார் கார்டில் புகைப்படம் மாற்ற வேண்டும் என்றால் முதலில் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி குறைந்த நேரத்தில் சேவை மையத்திற்கு செல்லலாம். அங்கு வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு உங்களின் கைரேகை மற்றும் கருவிழி சரிபார்க்கப்பட்டு புதிய புகைப்படம் எடுக்கப்படும்.அவ்வாறு எடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் ஆதார் கார்டில் உங்களது புதிய புகைப்படம் அப்டேட் செய்யப்படும். இதற்காக நீங்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |