ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
# முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும்.
# இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
# அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
# அடுத்ததாக உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்து கேப்ஷாவை உள்ளிட வேண்டும்.
# பிறகு “Submit” என்பதை கிளிக் செய்யவும்.
# அப்போது உங்கள் ஆதார் விபரங்கள் திரையில் தோன்றும்.
# அவற்றில் உங்கள் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என சரிப்பார்த்து கொள்ளலாம். எதாவது தவறு இருக்கும் பட்சத்தில் அதை பின்னர் திருத்திக்கொள்ளலாம்.
இது தவிர்த்து ஆதார் கார்டு வைத்திருப்பவர் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு ரூபாய்.100 மட்டுமே செலுத்தவேண்டும். உங்களது ஆதார் திருத்தம் செய்ய ஆதார் மையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், நீங்கள் இந்த இணைப்பில் ( https://resident.uidai.gov.in/file-complaint ) சென்று புகாரளிக்கலாம்.