Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்…!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் முகவரி சான்றுக்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், ஆதார் அட்டையில் முகவரியை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, “My Aadhaar” ஆப்ஷனில் இருந்து  “Update your Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் முகவரியை புதுப்பிக்கலாம்.

‘Update Demographics Data Online’ என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் முகவரியைப் புதுப்பிக்க இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ஆவணங்கள் இருக்கும் நிலையில் புதுப்பிக்க ‘Update Address with Address Proof’ மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் ரகசியக் குறியீடு வழியாக முகவரியைப் புதுப்பிக்க ‘Update Address via Secret Code’ என்ற ஆப்ஷனும் இருக்கும். முகவரி சான்றுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால், நீங்கள் முதல் தேர்வை தேர்வு செய்யலாம், ஆனால் இல்லாதவர்கள், இரண்டாவது ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

இந்த நடைமுறையில் கீழ்,  முகவரி சரிபார்ப்பு கடிதத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க உங்கள் முகவரியை உறுதிபடுத்தும் ஒரு நபர் மூலம் செயல்முறையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அளவுகோல்களுடன் பொருந்தினால் மட்டுமே உங்கள் முகவரியை புதுப்பிக்க முடியும். முகவரியை மாற்றுபவர் மற்றும்  அவரது முகவரியை உறுதிபடுத்துபவர் என இருவரின், மொபைல் எண்கள் அவரவர் ஆதார் எண்களில் பதிவு செய்யப்பட வேண்டும். முகவரியை உறுதி செய்பவர் முகவரி தரவுத்தளத்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Categories

Tech |