இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்ட ஒரு நிலையில் ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதில் ஒரு சில அப்டேட்டுகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விட முடியும். மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அப்படி ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
1. அதற்கு முதலில் https://www.uidai.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அதில் ‘My Aadhaar’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, ‘Update Your Aadhaar’ என்பதைகிளிக் செய்ய வேண்டும்..
3. அதில் ‘update demographics data online’ என்பதை கிளிக் செய்யவும்.
4.பின்னர் ‘Proceed to update Aadhaar’ என்ற ஆப்சனில் உங்களுடைய ஆதார் எண், கேப்ட்சா குறியீடு பதிவிட வேண்டியிருக்கும்.
5. ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும்.
6. அதைப் பதிவிட்டவுடன் மீண்டும் ‘Update Demographics Data’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
7. முகவரியில் திருத்தம் செய்வதற்கு ‘address’ என்ற ஆப்சனை கிளிக் செய்து உங்களுடைய புதிய முகவரி விவரங்களைப் பதிவிடவும்.
8. முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ‘proceed’ கிளிக் செய்ய வேண்டும்.
9. நீங்கள் அப்டேட் செய்த விவரங்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு கடைசியாக இதற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.
10. இறுதியில் ஓடிபி மூலமாக மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பு செய்யப்பட்டு, முகவரி மாற்றப்பட்டுவிடும்.