Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு ஒரிஜினலா? இல்லையா?…. உடனே செக் பண்ணி பாருங்க…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து நிறைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து ஏமாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆதார் அமைப்பு புதிய நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.அதன்படி 6 லட்சம் போலியான ஆதார் கார்டுகளை ஆதார் அமைப்பு ரத்து செய்துள்ளது.

இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒருவேளை தங்களுடைய ஆதார் கார்டும் போலியானதாக இருக்குமோ, அதனை ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற பயம் எழுந்துள்ளது.ஒருவேளை உங்களுக்கும் அந்த சந்தேகம் இருந்தால் உங்களுடைய ஆதார் கார்டு ஒரிஜினல் தானா என்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.இதற்கு நீங்கள் எங்கும் அழைய வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar  என்ற வெப்சைட்டில் செல்லவும்.

உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட்டு ‘proceed and verify aadhaar’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவிட வேண்டும்.

உங்களுடைய ஆதார் நம்பர் ஒரிஜினலாக இருந்தால் அதற்கான தகவல் திறையில் தோன்றும். ஆதார் நம்பர் வெரிஃபை செய்யப்பட்டுவிடும்.

போலியாக இருந்தால் அதற்கான தகவலும் தெரிவிக்கப்படும்.

Categories

Tech |