Categories
பல்சுவை

உங்க ஆதார் கார்டு தகவல் அறிய…. இதோ எளிய வழிமுறைகள்….!!!

ஆதார் அட்டை சம்பந்தமான ஏதாவது குழப்பங்களோ, சந்தேகங்களோ ஏற்பட்டால் பயனாளர்கள் அதை அறிந்து கொள்ள 1974 என்ற எண்ணுக்கு போன் செய்வது மூலமாகவோ, help@uidai. gov. in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியோ ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல் உபயோகிப்பாளர்களுக்கு வசதியாக resident. uidai. gov. in/check-aadhaar என்ற இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் #mAadhaarApp மூலமாகவும் ஆதார் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் ஒருவர் தங்களது ஆதார் தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள EIDயுடன், தேதி மற்றும் நேரம் முக்கியமானவையாகும். இந்த விவரங்கள் சரியானதாக இருந்தால் மட்டும் தான் ஒருவர் ஆதார் அட்டையில் உள்ள சேர்க்கை தகவலை அறிந்து கொள்ள முடியும். ஆதார் அட்டையின் சேர்க்கை தகவலை ஆன்லைன் வழியாக அறிந்து கொள்ள:

முதலில் resident. uidai. gov. in/check-aadhaar என்ற ஆதார் லிங்கில் லாகின் செய்ய வேண்டும்.
பிறகு ஒப்புதல் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள 14 இலக்க ENO எண் மற்றும் தேதி கொடுக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட கேப்ட்சாக் குறியீட்டை சரியாக பதிவு செய்யவும்.
பிறகு செக் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அங்கு உங்களது ஆதார் எண்ணின் சேர்க்கை தகவல் திரையிடப்படும்.
#mAadhaarApp ஆப் மூலமாகவும் உங்கள் சேர்க்கை தகவலை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |