Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு மிஸ் ஆகிடுச்சா?…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் உங்களின் ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படும். நீங்கள் எங்கும் அலையாமல் மிக எளிதாக ஆதார் கார்டை வாங்கிக் கொள்ளலாம். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக வேலையை முடித்துவிடலாம். ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பித்து நீங்கள் புதிய ஆதார் கார்டு பெற முடியும்.

அதற்கு முதலில் uidai.gov.in என்ற வெப்சைட்டில் சென்று  Aadhaar Services என்ற சேவையில் செல்லவும்.

அதில் My Aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

டிராப் டவுன் மெனுவில் உள்ள ‘Retrieve Lost or Forgotten EID/UID’ என்ற வசதியில் சென்று உங்களுடைய பெயர், ஆதார் எண் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மொபைல் நம்பர் பதிவிட்டவுடன் ஒரு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் உங்களுடைய UID/EID நம்பர் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.

இந்த UID/EID நம்பரை வைத்தே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.

மொபைல் நம்பரை ஆதாரில் அப்டேட் செய்வது ஈசியான ஒன்றுதான். ஆதார் சேவை மையத்திலேயே அப்டேட் செய்யலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

Categories

Tech |