Categories
பல்சுவை

உங்க ஆதார் தொலஞ்சி போச்சா…. கவலைய விடுங்க…. புதுசு உங்க வீடு தேடி வரும்…!!!

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை வழங்குகிறது. ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஒருவேளை உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து வாங்கிவிடலாம். ஆதார் PVC கார்டு அல்லது பிளாஸ்டிக் ஆதார் காடு வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

முதலில் UIDAI வலைதளமான https://residentpvc.uidai.gov.in /order-pvcreprint என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

செக்கியூரிட்டு கோட் மூலமாக ஆதார் விவரங்களை சரிபார்த்துவிட்டு, உங்களது ஆதார் கார்டு மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று குறிப்பிடவும். கொடுக்கப்பட்ட பாக்ஸில் டிக் செய்தாலே போதும்.

பின்னர் send OTP கொடுத்தால் உங்களது மொபைல் நம்பருக்கு OTP வரும். அதைவிட்ட பின்னர் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர் ஆதார் கார்டு ஆர்டர் செய்யப்பட்டு உங்களது முகவரிக்கே அனுப்பு வைக்கப்படும். ஆதார் கார்டு வந்துசேர இரண்டு வாரங்கள் வரை ஆகும்.

Categories

Tech |