இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஒருவேளை ஆதார் தொலைந்து விட்டால் என்ன செய்வது? யாரிடம் கேட்க வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்று அலைய வேண்டும்? என்ற கேள்வி எழும்.
இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எல்லாமே ஈசிதான் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வேலையை முடித்து விடலாம். இதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முகப்பு பக்கத்தில் உள்ள Aadhar Services என்று சேவையில் செல்லவும். அதில் My Aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். டிராப் டவுன் மெனுவில் உள்ள “Retrieve Lost or Forgotten EID/UID” என்ற வசதியில் சென்று உங்களுடைய பெயர், ஆதார் எண் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
மொபைல் நம்பர் பதிவிட்டவுடன் ஒரு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் உங்களுடைய UID/EID நம்பர் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இந்த UID/EID நம்பரை வைத்தே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.