Categories
மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டக்கூடாது…. வார்னிங் கொடுத்த உயர் நீதிமன்றம்….!!!!

அனுமதியை மீறி கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி கூடாது என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர் மணிகண்டன் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோசப் ரெட்டியார் காலனியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 15 அடி அகலம் உள்ள பொதுப் பாதையில் ஜெரோம் ஸ்டாலின் மற்றும் ரீட்டா மேரி ஆகியோர் ஐந்தடி வரை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார் .

இது தொடர்பாக பலமுறை ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்த நிலையிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நகராட்சி ஆணையர் தரப்பில் பொதுப்பாதையில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பான புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டவுடன், கட்டுமான பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும். கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. பொது பாதை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Categories

Tech |